வலியுறுத்தும் கருத்துகள்
June 09 2026
மதச் சார்பற்ற, தனிப்பட்ட மத நம்பிக்கையிலும் தலையீடற்ற, அனைத்து மதத்தவரையும் மதநம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு ஆட்சி நிர்வாகம்.

மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதார என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தைச் சுருக்காது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித, சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி எல்லோர்க்கும் எல்லாமுமான சமநிலைச் சமூகம் உருவாக்குவது

நம்பிக்கைகளை செயலில் மாற்றல்

ஜனநாயகம்

ஒரு நாட்டின் மக்களை, அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்துப் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை அவர்களுக்கு உத்திரவாதப்படுத்திச் சாத்தியப்படுத்துவது. ஆட்சி அதிகாரம், சட்டம், நீதி, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படைச் சுதந்திர உரிமைகளைப் பறிக்கும் மாநில / ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது.

சமதர்ம சமூகநீதி

இட ஒதுக்கீடு அல்ல... விகிதாச்சார இடப் பங்கீடே உண்மையான சமூக நீதிக்கு வழி வகுக்கும். ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, சாதி முழுவதுமாக ஒழிக்கப்படும் காலக்கட்டம் வரை, அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துத் துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.

சமத்துவம்

சாதி, மதம், இனம், நிறம், மொழி, பொருளதாரம், வர்க்கம் மற்றும் பாலின சமத்துவத்துடன் கூடிய உரிமை. எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே.

0 +
சமூக சேவை நிகழ்ச்சிகள்
0 +
இளைஞர் சந்திப்பு நிகழ்வுகள்
0 +
கல்வி ஆதரவு திட்டங்கள்
0 +
பொதுநல முகாம்கள்
“மக்களின் குரலை கேட்பதில்தான் உண்மையான தலைமையின் தொடக்கம் உள்ளது.”
© 2026 ஆர். சந்தோஷ் குமார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை